சீனாவில் உள்ள பிரபல நிறுவனம் தங்கள் ஊழியர்களிடம், "திருமணம் செய்யுங்கள், இல்லையென்றால் வேலையில் இருந்து நீக்கப்படுவீர்கள்" என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள தனியார் நிறுவனம், வரும் மார்ச் மாதத்திற்குள் பணிபுரியும் ஊழியர்கள் திருமணம் செய்யாவிட்டால், வேலையை விட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால், தங்களைப் பற்றிய விளக்கம் அளிக்கும் கடிதம் ஒன்றை நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு, ஊழியர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததால், இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டு உள்ளதாகவும், இந்த உத்தரவு பிறப்பிக்க என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், உத்தரவு வாபஸ் பெறப்பட்ட போதிலும், நிறுவனத்தின் ஊழியர்கள் விரைவில் திருமணம் செய்ய ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.