சந்தானபாரதி புகைப்படம் இடம்பெற்றிருந்தது திமுகவின் வேலை: அண்ணாமலை

Mahendran

வெள்ளி, 7 மார்ச் 2025 (17:11 IST)
மத்திய அமைச்சர் தமிழகம் வந்தபோது, அவரை வரவேற்கும் போஸ்டரில்  அமித்ஷா புகைப்படத்திற்கு பதிலாக, சந்தான பாரதி புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இது பெரும் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளான நிலையில், இது திமுகவின் வேலை என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
 
மத்திய உள்துறை அமைச்சர் இன்று  ராணிப்பேட்டைக்கு வருகை தந்த நிலையில், அவரை வரவேற்க பாஜகவினர் பல போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். அவ்வாறு ஒரு போஸ்டரில், அமைச்சர் அமித்ஷாவின் படத்திற்கு பதிலாக இயக்குநர் சந்தான பாரதியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலானது.
 
இதனை அடுத்து, இது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்த போது, சந்தான பாரதி புகைப்படம் இடம் பெற்றிருந்தது திமுகவினரின் வேலை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாஜக போஸ்டரில் பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர்களின் புகைப்படம் மட்டும் தான் இருக்கும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்