சீன உளவு கப்பலுக்கு இந்தியா கண்டனம்! – கடலிலேயே நிறுத்தி வைத்த இலங்கை!

சனி, 13 ஆகஸ்ட் 2022 (09:05 IST)
இந்திய அரசின் கண்டனத்திற்கு உள்ளான சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை வரவில்லை என அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்க் 5 என்ற கப்பல் கடந்த 11ம் தேதியன்று இலங்கை அம்பந்தொட்டை துறைமுகத்திற்கு வர உள்ளதாகவும், எரிபொருள் நிரப்புவதற்காக 17ம் தேதி வரை அங்கு நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் சீன உளவு கப்பலின் இந்த வருகை இந்தியாவை உளவு பார்க்கும் நோக்கில் இருக்கலாம் என இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவின் எதிர்ப்பை தொடர்ந்து சீன உளவுக் கப்பலை இலங்கை எல்லைக்குள் அனுமதிக்கவில்லை என்றும், அந்த கப்பல் சர்வதேச கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்