நமக்குத் தவறுகள் நடந்தால் தட்டிக் கேட்கும் தைரியமும், நாமே தவறு செய்யாமல் விழித்திருந்து வாழ்க்கையில் சாதிக்கின்ற மனோதிடமும், பெற்றோரின் மன நிலை பொருளாதா நிலை புரிந்து, ஒவ்வொன்றையும் செய்து வந்தால் நமக்கு எதிலும் குறைவு வராது. அந்தக் காலத்தில் எல்லாம் எப்படி இருந்தார்கள் மாணவர்கள்! அவர்களுக்குப் படிப்பும், எதிலாவது சாதிக்க வேண்டுமென்ற எண்ணமும் நெஞ்சத்த்தில் நிறைந்திருந்தது. தன் முதல் சிவில் சர்வீர் தேர்விலேயே தேர்வாகி தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்றவராகி, தமிழகத்திலேயே பொறுப்பு வகிக்கும் ஐஏஎஸ் ஆனார் இறையன்பு. இன்று தலைமைச் செயலராகி அப்பதவிக்குப் பெருமை சேர்த்துள்ளார், அவர் இளைஞர்களி எழுச்சிக்குப் பேசிவரும் பேச்செல்லாம் இளைஞர்களும் மாணவர்களும் கேட்க வேண்டும். அவருக்கு இல்லாத பணிசுமையா? ஒரு நாளில் எத்தனை கையெழுத்துகள், கோப்புகள், இதற்கிடையிலும், பேச்சு, எழுத்து, இலக்கிய உரையாடல், பத்திரிக்கை வாசிப்பு, புத்தகத்தில் அறிவுத்தேடல், அதிகாரிகளுடன் கலந்துரையாடல், முதல்வருடன் சந்திப்பு, பிரதமருடன்ஆலோசனை என்று எப்போதும் பரபரப்பாக இருப்பதற்கு அவர் இப்போதல்ல, தன் மாணவப் பருவத்திலிருந்தே, இளமைக்காலத்தில் ஆட்சியாளராகப் பதவியேற்கும் போதிலிருந்து தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டனர்.