சீன - இந்தியா போர் பதற்றம்: எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் பலி!

செவ்வாய், 16 ஜூன் 2020 (13:24 IST)
லடாக் எல்லை தொடர்பாக இந்திய - சீனா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் இந்திய ராணுவத்தினர் மூவர் பலி.
 
உலகமே கொரோனா வைரஸ் பரபரப்பில் இருந்த நிலையில், கொரோனா வைரசுக்கு காரணமான சீனா திடீரென இந்தியாவின் எல்லையான லடாக் பகுதியில் ராணுவத்தை குவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
பதிலுக்கு இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டதால் இரு நாட்டிற்கும் இடையே போர் மூளும் என்ற அச்சம் உலக நாடுகளை அச்சுறுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 
 
இதனால் போர் தவிர்க்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா ரஷ்யா உட்பட பல வல்லரசு நாடுகளும் குரல் கொடுத்தன என்பதும் குறிப்பிடத்தகக்து.
 
இதனால் சீனா திடீரென இந்த விவகாரத்தில் சற்று நேரத்தில் பின்வாங்க தொடங்கியதாகவும் கூறப்பட்டது. சீனாவின் கிழக்கு லடாக் பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கி உள்ளதாகவும், கல்வான் பகுதியில் சீன ராணுவம் 2.5 கிமீ பின்வாங்கியதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
இந்நிலையில், லடாக் எல்லை தொடர்பாக இந்திய - சீனா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் இந்திய ராணுவ தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு ஏற்படுத்துள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்