168 மில்லியன் டாலர் செலவில் செயற்கை மழை: சீனாவில் வறட்சி மீட்பு நடவடிக்கை!

வெள்ளி, 27 ஜனவரி 2017 (10:58 IST)
வரட்சியை போக்க, செயற்கை மழை உருவாக்க சீன அரசு 168 மில்லியன் டாலர் செலவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 
 
சீனாவின் வட மேற்கு பகுதியில் உள்ள மாகாணங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியை ஈரப்பதமிக்க நிலப்பரப்பாக மாற்ற புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
அதாவது, விமானங்கள் மூலம் மேகங்களில் விதைகளை தூவ திட்டமிட பட்டுள்ளது. இதன் மூலம் மேகங்கள் குளிர்ந்து, மழை உருவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
சுமார் 3,70,658 சதுர மைல் பரப்பளவில் இது மேற்கொள்ளப்படுகிறது. இது பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நிலப்பரப்பாகும். இருப்பினும் அது சீனாவின் மொத்த நிலப்பரப்பில் 10% மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த திட்டத்திற்கு புதிதாக 4 விமானங்கள், மேம்படுத்தப்பட்ட 8 விமானங்கள், 897 புதிய ராக்கெட் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறது.
 
சமீபத்தில் மேகங்களில் சில்வர் அயோடைடு துகள்களை தூவி, மழையை பொழிவித்து சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்