மறுபடி பொதுமுடக்கமா? எங்களால முடியாது! – போராட்டத்தில் குதித்த சீன மக்கள்!

திங்கள், 28 நவம்பர் 2022 (13:10 IST)
சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு இறுதி வாக்கில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவியது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

இந்நிலையில் சீனாவில் சமீபமாக மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 39,791 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் 36,082 பேருக்கு அறிகுறியற்ற கொரோனா ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் பகுதிகளில் சீன அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இதனால் சீனாவில் பரபரப்பு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தை படம் பிடிக்க சென்ற செய்தியாளர் ஒருவரை சீன போலீஸார் தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்