திருவாரூரில் திடீரென ரயில் போராட்டம் நடத்திய திமுக... என்ன காரணம்?

திங்கள், 28 நவம்பர் 2022 (09:36 IST)
திருவாரூரில் திடீரென ரயில் போராட்டம் நடத்திய திமுக... என்ன காரணம்?
பொதுவாக ஆளுங்கட்சியை எதிர்த்து தான் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தும் என்பதை பார்த்து வருகிறோம்.. ஆனால் இன்று ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திடீரென ரயில் மறியல் போராட்டம் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ரயில்வே திட்டங்களில் டெல்டா மாவட்டத்தில் உள்ள பகுதிகளை தெற்கு ரயில்வே புறக்கணிப்பதாக கூறி திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் அனைத்து கட்சியினர் திடீரென ரயில் மறியல் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த போராட்டத்தில் திமுக, திகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ,மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் மறிக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்