வைரஸ் இருந்தால் மெசேஜ் அனுப்பும் மாஸ்க்! – சீனாவின் புதிய கண்டுபிடிப்பு!

புதன், 21 செப்டம்பர் 2022 (11:41 IST)
உலகம் முழுவதும் கொரோனா உள்ளிட்ட வைரஸ்களின் பாதிப்பு உள்ள நிலையில் வைரஸை கண்டறிந்து எச்சரிக்கும் மாஸ்க்கை சீனா கண்டுபிடித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் சீனாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து இருந்து வருகிறது.

ALSO READ: தொடர்ந்து 4 ஆயிரமாக நீடிக்கும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

இந்நிலையில் கொரோனா இருந்தால் கண்டறிந்து மெசேஜ் மூலம் எச்சரிக்கக்கூடிய முகக்கவசத்தை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த முகக்கவசம் அணிந்து சென்றால் காற்றில் உள்ள எந்த வகை வைரஸையும் கண்டறிந்து உடனடியாக மாஸ்க் அணிந்துள்ளவரின் செல்போனுக்கு மெசேஜ் மூலம் அலர்ட் செய்யுமாம்.

காற்றோட்டம் குறைவாக உள்ள லிப்ட், மூடிய அறைகள் உள்ளிட்டவற்றில் இந்த மாஸ்க் சிறப்பாக செயல்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்