நிலவின் மறுபக்கத்தை ஆராய்ச்சி செய்ய சீனா தீவிரம் ...
வியாழன், 3 ஜனவரி 2019 (20:57 IST)
நிலவின் முயற்சிகள் ஆராய்ச்சி செய்ய பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சீனா அனுப்பிய சாங்கே 4 விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் இறங்கியதாக தகவல் வெளியாகின்றன.
நிலவை ஆராய்ச்சி செய்வதற்காகவே பல தொலிழ்நுட்ப கருவிகள் உள்ளடக்கிய சாங்கே 4 என்ற விண்கலத்தைச் சீனா நாடு லாங்மார்ச் 3 பி என்கிற ராக்கெட் முலம் டிசம்பர் ஏழாம் நாள் விண்வெளியில் செலுத்தியதாக தெரிகிறது.
தற்போது அந்த விண்கலமானது நம் இந்திய நேரப்படி இன்று காலை சரியாக 10:26 மணியளவில் நிலவில் இறங்கியதாக கூறபடுகிறது.
நிலாவின் மறுபக்கத்தை யாரும் இதுவரை காணாத நிலையில் சீனாவின் விண்கலம் தான் முதன்முதலாக தரையிறங்கியுள்ளது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.