வடகொரியாவில் முதல் கொரோனா - நாடு முழுவதும் ஊரடங்கு!

வியாழன், 12 மே 2022 (10:28 IST)
வடகொரியா நாட்டில் முதன் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல். 

 
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், பின்னர் குறைவதுமாக தொடர்ந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து வடகொரியா நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 
 
குறிப்பாக வட கொரியாவில் உள்ள 25 மில்லியன் மக்களில் யாருக்கும் தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது. வடகொரியாவில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிக்காத சூழலில் தற்போது ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் கொரோனா தொற்று பாதிப்பால் வடகொரியாவின் அவசர நிலை பிரகடனம், எல்லையை கண்காணிக்க அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார்.
 
இதுகுறித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியதாவது, தீவிரமான சூழல் ஒன்று உருவாகியுள்ளது. நமது தேசத்தில் ஒமைக்ரான் வைரஸ் சத்தமில்லாமல் நுழைந்துவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தேசிய அவசர நிலை அறிவிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்