கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்சும் ஒன்று, தற்போது நாட்டில் 82,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,507 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்த நாட்டில் உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களை அரசு கோவிட் தொற்று நோயாளிகளிடம் உரியா பாதுகாப்பு உதவிகள் இல்லாமல் நிர்வாணமாக அனுப்புவதாகக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
இது சம்மந்தமாக தங்கள் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். #Poilcontrelecovid (கொரோனாவுக்கு எதிராக நிர்வாணமாக) என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.