புற்று நோய்: கை தசையை பெண்ணில் நாக்கில் பொருத்திச் சாதனை!

வியாழன், 13 ஏப்ரல் 2023 (21:52 IST)
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஜெம்மா வீக்ஸ் ( 37 வயது). இவருக்கு புற்று நோய் பாதிப்புள்ள நிலையில், இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில ஆண்டுகளாக அவருக்கு நாக்கில், வெள்ளைத் திட்டுகள் தோன்றின.

புற்று நோயினால வந்த இந்த வெள்ளைத் திட்டுகளால் பாதிக்கப்பட்டிருந்த ஜெம்மாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம்  நாக்கில் ஒரு பெரிய துளை உருவானது.

இதனால், ஜெம்மாவினால் சாப்பிட முடியவில்லை. பேசமுடியவில்லை. அவர் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தபோது, அவருக்கு 4 வது வாய் மற்றும் கழுத்து புற்று நோய் இருப்பது தெரியவந்தது.

அவரது நாக்கின் 90 % பகுதியை இழந்திருந்த நிலையில், அதன் பெரும்பகுதிகள்  நீக்கிவிட்டு, மருத்துவர்கள் அவர் கையில் இருந்து  திசு ஒட்டுதல்களை எடுத்து    நாக்கில் பொருத்தப்படும். ஆனால், மீண்டும் அவரால் பேச முடியாது என்று கூறினர்.

ஆனால், சிகிச்சைக்குப் பின் சில நாட்களில் ஜெம்மா பேசினார். இவர் பேசுவதை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடிவதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்