அமெரிக்காவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்த எந்த தடையும் கிடையாது. இந்த நிலையில் அமெரிக்காவை அடுத்து கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை என நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோஅதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் டிக் டாக் செயல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசு விளக்கம் அளித்துள்ளது.