மலரை விட்டு கஞ்சாவுக்கு மாறிய விவசாயிகள்

வெள்ளி, 2 டிசம்பர் 2016 (15:09 IST)
கனடா நாட்டில் பெரும்பான்மையான மலர் தோட்ட விவசாயிகள் கஞ்சா பயிர் வளர்ப்பதில் ஆர்வம்காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
கனடா நாட்டில் இதுவரை மருத்துவ தேவைக்காக மட்டுமே போதைப்பொருளான கஞ்சா பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கேளிக்கைக்காகவும் கஞ்சாவை பயன்படுத்த அனுமதி அளிக்க அரசு தீர்மானித்துள்ளது. தற்போது கஞ்சா விற்பனையால் அரசுக்கு 1.25 கோடி டாலர் வருமானமாக கிடைத்து வருகிறது.
 
கஞ்சா கள்ளத்தனமான விற்கப்படுவதை தடுக்கவும், சட்ட அனுமதியுடன் நடைப்பெறும் கஞ்சா விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை இளைஞர்களின் மேம்பாட்டுக்காக செலவிடப் போவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடேயு தெரிவித்துள்ளார்.
 
அனைவரும் சந்தோஷத்துக்காக கஞ்சா புகைக்க ஆரம்பித்து விட்டால் உள்நாட்டு கஞ்சா தேவை அடுத்த இரு ஆண்டுகளில் சுமார் 6 லட்சம் கிலோவாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்குள்ள பண்ணை விவசாயிகள் லாவெண்டர் போன்ற நறுமன மலர்களை பயிரிடுவதற்கு பதில் கஞ்சா விளைவிக்க தொடங்கிவிட்டனர்.
 
மேலும் சுமார் 100 முதல் 10 ஆயிரம் கிலோ வரை கஞ்சா பயிரிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்