கனடாவிலும் ஒலிக்கும் தமிழ்; பாதுகாப்பு அமைச்சராக தமிழக வம்சாவளி பெண்!

புதன், 27 அக்டோபர் 2021 (08:43 IST)
கனடாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக தமிழக வம்சாவளியை சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று மூன்றாவது முறையாக ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் புதிய அமைச்சரவை அமைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில் புதிய அமைச்சரவையின் பாதுகாப்பு துறை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை எஸ்.வி.ஆனந்த் தமிழகத்தை சேர்ந்தவர். முன்னதாக அமெரிக்கா அரசின் முக்கிய பொறுப்புகளில் தமிழர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது கனடாவிலும் தமிழர்கள் முக்கிய பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்