கடைசி கட்டத்தை எட்டிய பிரிட்டிஷ் படையினர்

வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (14:34 IST)
காபூல் விமான நிலையத்தில் இருந்து ஆட்களை வெளியேற்றும் பணியில் பிரிட்டிஷ் படையினர் கடைசி கட்டத்தை எட்டிவிட்டதாக தகவல். 
 
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
காபூல் விமான நிலையத்தில் இருந்து ஆட்களை வெளியேற்றும் பணியில் பிரிட்டிஷ் படையினர் கடைசி கட்டத்தை எட்டிவிட்டதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
பிரிட்டன் நாட்டினர் மற்றும் வெளியேற்றத்துக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டவர்கள், விமான நிலையத்தில் உள்ளவர்கள் தொடர்பாக மட்டுமே கவனம் செலுத்தப்படும். புதிதாக யாரும் வெளியேற்றுவதற்காக அழைக்கப்படமாட்டார்கள்.
 
(விரும்புகிற) எல்லோரையும் வெளியேற்ற முடியவில்லை என்ற வருத்தத்துடனே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வேலஸ் தெரிவித்துள்ளார்.
 
மேலும் காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் வெளியேறும் திட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்திருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்