போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லண்டன் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் இன்று அதிகாலை முதல் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் இருப்பினும் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்படவில்லை என்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போரிஸ் ஜான்சன் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 55 வயது ஆன போரீஸ் ஜான்சன் உடல்நிலை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் நலம் விசாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது