அதிபர்னா பெரிய இவரா? தடுப்பூசி போட்டீங்களா? – மொக்கை வாங்கிய பிரேசில் அதிபர்!

செவ்வாய், 12 அக்டோபர் 2021 (08:59 IST)
பிரேசிலில் கால்பந்தாட்டம் பார்க்க போன பிரேசில் அதிபர் தடுப்பூசி போடாததால் அதிகாரிகள் திரும்ப அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் உலக நாடுகள் பலவற்றிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரேசில் அதிபர் பொல்சனேரோ தொடர்ந்து தடுப்பூசி போட மறுத்து வருவதுடன், அடிக்கடி தடுப்பூசிக்கு எதிராகவும் பேசி வருகிறார்.

இந்நிலையில் விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் சா பாலோ நகருக்கு சென்ற அவர் அங்கு நடந்த உள்ளூர் கால்பந்து விளையாட்டு போட்டியை காண சென்றுள்ளார். ஆனால் அவர் தடுப்பூசி போடாததால் அவரை உள்ளே அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் கோபமாக அவர்களிடம் வாக்குவாதம் செய்துவிட்டு திரும்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்