சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்...வைரலாகும் மணல் ஓவியம்!

திங்கள், 11 அக்டோபர் 2021 (23:17 IST)
அமிதாப் பச்சனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபல ஓவியர் வரைந்த மணல் ஓவியம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
 

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இன்று தனது 79 வது பிறந்த தினத்தைக் கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் பிரபல சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் , ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் பிரபல ஓவியர் சுதர்சன் பட்நாயக் வரைந்த மணல் ஓவியம் பார்வையாளர்களையும், சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்