மாஸ்க், தடுப்பூசி தேவையில்லை; ஊரடங்கு வாபஸ்! – பிரதமர் அறிவிப்பால் அதிர்ச்சி!

வியாழன், 20 ஜனவரி 2022 (09:37 IST)
இங்கிலாந்தில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை அந்நாட்டு பிரதமர் தளர்த்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் பல நாடுகள் ஊரடங்கை தீவிரப்படுத்தி வருகின்றன. இங்கிலாந்தில் ஒமிக்ரான் பரவல் தினசரி பாதிப்புகள் 1 லட்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில் வரும் 27ம் தேதி முதல் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை, பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை என அறித்துள்ளார். ஒமிக்ரான் தீவிரமடையும் நிலையில் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்