பிரதமர் மோடி பிரேசில் பயணத்தை முடித்துவிட்டு நமீபியா சென்ற நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும், பாரம்பரிய முறைப்படி டிரம்ஸ் கலைஞர்கள் இசையமைத்த நிலையில், அந்த டிரம்ஸையும் பிரதமர் மோடியும் வாசித்து மகிழ்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடா, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். கடைசியாக பிரேசில் பயணத்தை முடித்து கொண்டு இன்று நமீபியா நாட்டுக்கு சென்ற பிரதமருக்கு அந்நாட்டு அதிபர் நெட்டம்போ நந்தி நேரில் வந்து வரவேற்பு அளித்தார்.
மேலும், பாரம்பரிய முறைப்படி கலைஞர்கள் டிரம்ஸை வாசித்த நிலையில், அதை பார்த்த பிரதமர் உற்சாகமாகி அவரும் டிரம்ஸ் வாசித்தார். அதன்பின் நமீபிய அதிபருடன் இருதரப்பு முக்கிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும், நமீபியா நாட்டின் பாராளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.