பிச்சை எடுப்பது தண்டனைக்கு உரிய குற்றம் - இலங்கையில் அதிரடி

வியாழன், 19 நவம்பர் 2020 (20:45 IST)
இந்தியாவின் அண்டை நாடு இலங்கை., இயற்கை எழில் சூழ்ந்த இந்த நாட்டுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வாடிக்கையாகும்.

இந்நிலையில் இலங்கையில் யாரும் பிச்சை கொடுத்தாலும் பிச்சை எடுத்தாலும் தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கைத் தலைநகர் கொழும்பில்  இன்று போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் கொழும்பு, அஜித்ரோஹினா உள்ளிட்ட பகுதிகளில்  பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பலர் தினமும் சம்பளத்திற்காகவும் இப்படிப் பிச்சை எடுத்துவதால், பிரதான சாலைகளில் நெரிசல் உருவாகிறது.

இதைத்தவிர்ப்பதற்காக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இனிமேல் யாராவது பிச்சை எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
பிச்சையெடுப்பது தண்டனைக்கு உரிய குற்றம் எனக் கூறப்பட்டுளதால்  அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்