உடல்வலிக்கு சிறந்தது பாராசிட்டாமலா ? பியரா ? – வியக்க வைத்த ஆய்வு முடிவுகள் !

செவ்வாய், 26 நவம்பர் 2019 (15:27 IST)
உடல்வலிக்கு சிறந்த வலி நிவாரணியாக பியர் இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிரீன்விச் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள கிரீன்விச் பல்கலைக்கழகம் மிக வித்தியாசமான ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 400க்கும் மேற்பட்டவர்களிடம் 18 விதமான ஆய்வுகளை நடத்தினர். அதில் ஒரு  ஆய்வில் உடல்வலி உள்ளவர்கள் 2 கிளாஸ் பியர் அருந்தினால் அது பாராசிடாமலை விட நல்ல தீர்வுகளை அளிப்பதாக கண்டுபிடித்துள்ளனர். ஆனால் தொடர்ச்சியாக இதையே எடுத்துக் கொண்டிருந்தால் அது உடல் ஆரோக்யத்துக்கு தீங்காகும் எனவும் அறிவித்துள்ளனர். பீர் குடிப்பதின் மூலம் நம் உடலின் வலிதாங்கும் சக்தியை உயர்த்த முடியும் என ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்