புகைப்படம், பட்டாசு, பட்டம் தவிர்பீர் - உதயநிதி ஸ்டாலின் அதிரடி

வியாழன், 7 நவம்பர் 2019 (17:34 IST)
இனி, நான் சம்பந்தப்படாத, கலந்துகொள்ளாத நிகழ்ச்சிகள் பற்றிய நாளிதழ் அறிவிப்புகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்களில் என் புகைப்படத்தை கழகத்தினர் பயன்படுத்தக்கூடாது. மேலும் பட்டப்பெயர்கள் சூட்டுவதையும், நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :
மதவெறிக் கூட்டத்துக்கு தமிழ் மண்ணில் அறவே இடம் இல்லை என்பது நாம் அறிந்ததே. ஆனால் நம் பெருமித அடையாளங்களை  உண்மைக்கு மாறான தகவல்களாக திரித்து பிரசாரம் செய்கின்றனர். நித சூழலில் பொய் பிரசாரம் செய்யும் மதவெறி கும்பலுக்கு நாம் தீனி போட்டுவிடக் கூடாது என்பது எனது வேண்டுகோள். திமுக சம்பந்தப்பட்ட விழாக்களில் மூத்த தலைவர்களின் புகைப்படங்களைத் தவிர என்  புகைப்படமே (உதயநிதி ) இடம்பிடிக்கிறது. இதற்கு யார் காரணம் என விவாதிக்கிறார்கள்.
 
எனவே நான் கலந்து கொள்ளாத நிகழ்ச்சி பற்றிய நாளிதழ் அறிவிப்புகளில், சுவரொட்டிகளில், அழைப்பிதழ்களில் எனது புகைப்படத்தைக் கழகத்தினர் பயன்படுத்தக்கூடாது. பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், கழகத் தலைவர் போன்ற நம் முன்னோடிகளின் புகைப்படங்கள் தன் இடம்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
இதற்கு திமுக கட்சித் தொண்டர்கள் வரவேற்புத் தெரிவித்து டுவிட்டரின் லைக்குகள் போட்டு வருகின்றனர்.

இனி, நான் சம்பந்தப்படாத, கலந்துகொள்ளாத நிகழ்ச்சிகள் பற்றிய நாளிதழ் அறிவிப்புகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்களில் என் புகைப்படத்தை கழகத்தினர் பயன்படுத்தக்கூடாது. மேலும் பட்டப்பெயர்கள் சூட்டுவதையும், நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/qMQGVvx9sx

— Udhay (@Udhaystalin) November 7, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்