இந்தியாவின் முதல் மெகா செயற்கை நுண்ணறிவு மையம்.. கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அறிவிப்பு..!

Siva

செவ்வாய், 14 அக்டோபர் 2025 (13:46 IST)
கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் முதல் மெகா செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கியதாகவும் அறிவித்துள்ளார்.
 
இது கூகுள் இந்தியாவில் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2026-2030) சுமார் $15 பில்லியன் மதிப்பில் இந்த மையம் உருவாக்கப்படும். இது ஒரு "மைல்கல் வளர்ச்சி" என சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த மையம், ஜிகாவாட் அளவிலான கணினித் திறனுடன், புதிய சர்வதேச கடலுக்கடி கேபிள் நுழைவாயிலையும் கொண்டிருக்கும். இது இந்தியாவின் டிஜிட்டல் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.
 
டெல்லியில் நடந்த 'பாரத் ஏ.ஐ. சக்தி' நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த திட்டம் "இந்தியாவின் டிஜிட்டல் மாற்ற பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம்" என்று வரவேற்பு தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்