முற்பகல் செய்த உதவி பிற்பகல் தானே வரும்! – இந்தியாவுக்கு வங்காளம் ஆதரவுகரம்!

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (09:08 IST)
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த உதவிகள் செய்வதாக உலக நாடுகள் அறிவித்துள்ள நிலையில் வங்காள தேசமும் தேவையான மருத்துவ உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 4 லட்சத்தை நெருங்கி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் ஆக்ஸிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறையை போக்க உதவுவதாக உலக நாடுகள் பல அறிவித்து வருகின்றன. அந்த வகையில் வங்காளமும் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு துறை செயலாளர் மசூத் பின் மொமென் கூறுகையில் ” இந்தியா எங்களிடம் ரெம்டெசிவிர் மருந்துகளை கேட்டிருந்தது.  அதனை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து இருக்கிறோம்” என கூறியுள்ளார்.

இதன் மூலம் வைரசுக்கு எதிரான 10 ஆயிரம் மருந்து குப்பிகள், 30 ஆயிரம் பி.பி.இ. உபகரணங்கள் மற்றும் தேவையான சத்துகள் நிறைந்த மருந்துகள் ஆகியவை ஆயிரக்கணக்கில் அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின்போது வங்கதேசத்துக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்