மருத்துவமனை படுக்கைகள் தட்டுப்பாடா? – இடம் கிடைக்காமல் நோயாளிகள் அவதி!

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (08:55 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை எழுந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை அதிகரித்தல், தடுப்பூசி போடுதல் போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் படுக்கைகள் முக்கால் சதவீதம் நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட நோயாளிகளுக்கு படுக்கை இல்லாததால் ஆம்புலன்ஸிலேயே காக்க வைக்கப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லேசான பாதிப்புகள் உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் உள்ளிட்டவையும் தனியார் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்