ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை பொருத்தவரை, ஆஸ்திரேலியா அணி கடந்த பல ஆண்டுகளாக ஆதிக்கம் செய்து வந்த நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரை இழந்துள்ள நிலையில் அதன் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் ஏற்கனவே இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடந்த போது, இன்றைய போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை, நான்கு விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது. ஆனால், ஆஸ்திரேலியா அணி வெறும் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், இலங்கை அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றாலும், ஒரு நாள் தொடரை முழுமையாக இழந்துள்ளது. இதனால், அதன் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.