ஆர்டெமிஸ் 1 ராக்கெட் எஞ்சின் கோளாறு! – விண்ணில் ஏவப்படும் தேதி அறிவிப்பு!

புதன், 31 ஆகஸ்ட் 2022 (09:02 IST)
நிலவுக்கு மனிதனை கொண்டு செல்லும் ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் ராக்கெட்டில் எஞ்சின் கோளாறு ஏற்பட்ட நிலையில் மீண்டும் ஏவும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் ராக்கெட் ஆர்டெமிஸ் 1 கடந்த 29ம் தேதி ஏவ இருந்த நிலையில் எஞ்சின் கோளாறு காரணமாக ஏவுதல் நிறுத்தப்பட்டது.

பின்னர் ராக்கெட்டின் கோளாறுகளை சரிசெய்யும் பணியில் நாசா தீவிரமாக ஈடுபட்டது. தற்போது கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆர்டெமிஸ் 1 விண்வெளி பயணத்திற்கு தயாராக உள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள நாசா, நிலவு பயண திட்டத்தின் ஆர்டெமிஸ் 1 தற்போது கோளாறுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 3ம் தேதி சனிக்கிழமை அன்று கென்னடி ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஆர்டெமிஸ் 1 தனது நிலவு பயணத்தை தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் நிலவில் மனிதன் இறங்க வேண்டிய இடம் குறித்து ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படுகிறது. 2025க்குள் மனிதனை நிலவுக்கு அனுப்புவதை நாசா நோக்கமாக கொண்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்