கடலுக்கு அடியில் இஸ்ரேலை நோக்கி நிறுத்தப்பட்டுள்ள ராணுவ டாங்கிகள்: காரணம் என்ன?

திங்கள், 30 ஜூலை 2018 (19:36 IST)
லெபனான் சூழலியலாளர்கள் ராணுவ டாங்கிகளை கடலுக்கு அடியில் நிறுத்தியுள்ளனர். அதுவும் இந்த டாங்கிகளை இஸ்ரேலை நோக்கி நிறுத்தியுள்ளனர். இதற்கான காரணம் பின்வருமாறு...
போருக்கு மட்டும் அல்ல சுற்று சூழலுக்காகவும் ராணுவ டாங்கிகளை பயன்படுத்தலாம் என்று அதனை செயல்படுத்தி காட்டியுள்ளனர் லெபனான் சூழலியலாளர்கள். 
 
கடல் வாழ் உயிரினங்களுக்கு புகலிடம் தருவதற்காக கடலுக்கு அடியில் 10 பழைய ராணுவ டாங்கிகளை நிறுத்தியுள்ளனர். இந்த ராணுவ டாங்கிகள் மீது வீரைவில் கடல்பாசி வளர்ந்து கடல் உயிரினங்களின் வசிப்பிடமாக இது மாறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
 
இந்த 10 டாங்கிகள் கடலில் 3 கிமீ அழத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் கடலுக்கு அடியில் இஸ்ரேலை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கிறது. பாலத்தீன மக்களுக்கு ஆதரவை தெரிவிக்க இவ்வாறு நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்