அரபு நாடுகளை பதற வைத்த இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்!

செவ்வாய், 26 ஜூன் 2018 (19:31 IST)
இஸ்ரேல் சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து அரபு நாடுகள் பதற்றத்தில் உள்ளன.

 
இஸ்ரேலிய விமான படைகள் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஈரானிய சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான சில வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.
 
ஆனால் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா விமான படைகள் இஸ்ரேல் தாக்குதலை இடைமறித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தாக்குதலை எந்த ஊடகமும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
 
இந்நிலையில் மற்ற அரபு நாடுகள் இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து பதற்றத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்