நேற்று , உக்ரைனில் , கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர், ரஷ்ய படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்தது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இன்று வின்ஸ்சியா நேசனல பியாகோ மருத்துவ பல்கலையில் படித்து வந்த பஞ்சாபை சேர்ந்த மாணவன் சந்தன் ஜிண்டால்(22) இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும், உடல் நலக்குறைவால் இன்று வின்ஸியாவில் உள்ள எமர்ஜென்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவன் சாந்தன் ஜிண்டால் உயிரிழந்துள்ளதாகவும், அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர அவரது தந்தை அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.