’விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரை சுத்திகரித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும், இதர தாவரங்களுக்கு பாதிக்காத பயிர் எது என்ற ஆராய்ச்சியை நீண்டகாலமாக நடத்தி வருகிறோம். இப்போது அதற்கான விடையைக் கண்டு பிடித்துள்ளோம். நெற்பயிர் ரசாயணக் கழிவுகளை சுத்தப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது.
பண்ணைகளில் இருந்து வெளியேறும் பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் கலந்த கழிவுநீர் ஆறு, ஏரிகளில் கலக்கிறது. இந்த கழிவுநீர் கால்வாய்களில் நெற்பயிர்களை வளர்த்தோம். வேறு சில கால்வாய் களில் இதர செடிகளை வளர்த்தோம். நான்கு பண்ணைகளில் சுமார் 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆய்வு நடத்தினோம்.
இதில் நெற்பயிர் வளர்க்கப்பட்ட கால்வாய்களில் 85 சதவீதம் முதல் 97 சதவீதம் வரை ரசாயன கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அமெரிக்க விவசாயிகள், தங்களது பண்ணைகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் நெற்பயிர்களை வளர்க்க அறிவுறுத்தியுள்ளோம். இந்த நெற்பயிரை உணவுக்காகவும் பயன்படுத்தலாம்.’.