தண்ணீர்தான் மிகப்பெரிய பிரச்சனை… 12 வயது சிறுமிக்கு இப்படி ஒரு நோயா?

சனி, 21 நவம்பர் 2020 (15:05 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த சிறுமிக்கு தண்ணீர் உடலில் பட்டால் அரிப்பு மற்றும் புண் ஏற்படும் வினோதமான பிரச்சனை உள்ளதாக சொல்லப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த 12 வயது சிறுமியின் பெயர் டேனியல் மெக்ரெவன்.  இவருக்கு உலகிலேயே 100 க்கும் குறைவான நபர்களுக்கு இருக்கும் மிக அரிதான நோய் ஒன்று உள்ளது. அதன் படி அவருக்கு உடலில் தண்ணீர் பட்டாலே அரிப்பு, வலி மற்றும் புண் ஆகிய பிரச்சனைகள் எழுகின்றன. இதனால் அவரால் நிம்மதியாக குளிக்க முடியவில்லை. ஆனால் தண்ணீரை உட்கொள்வதால் அவருக்கு எந்த பிரச்சனையும் எழுவதில்லை.

இந்த கொடூரமான நோய்க்கு அக்வாஜெனிக் உர்டிகேரியா என்று பெயர். இவருக்கு உடலில் இருந்து வியர்வை ஏற்பட்டாலும் பிரச்சனைதான் என்பதால் வெயில் நேரங்களில் அவர் வீட்டை விட்டுக் கூட வெளியே செல்ல முடிவதில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்