முடிவுக்கு வருகிறது கொரோனா: தடுப்பூசி கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானிகள்

திங்கள், 16 மார்ச் 2020 (08:58 IST)
தடுப்பூசி கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானிகள்
சீனா, இத்தாலி, ஸ்பெயின் உள்பட உலக நாடுகளில் கடுமையாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும் என்று உலகில் உள்ள விஞ்ஞானிகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்
 
இந்த நிலையில் கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசியை அமெரிக்கா கண்டுபிடித்து உள்ளதாகவும் இதனை மருத்துவ சோதனை செய்யும் பணி இன்று முதல் தொடங்கும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் 
 
மனித இனத்தையே அழித்து வரும் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க இந்திய விஞ்ஞானிகள் உட்பட உலக விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பல நாட்டு ஆராய்ச்சி கூடங்கள் போட்டி போட்டுக்கொண்டு இதற்கான தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவினர் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இந்த மருந்தை மதிப்பீடு செய்ய மருத்துவ சோதனை செய்யும் பணி இன்று முதல் தொடங்கும் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி ஒருவருக்கு இன்று பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் ஒரு தடுப்பூசி சரியாக வேலை செய்கிறதா என்பதை கண்டுபிடிக்க 18 மாதங்கள் ஆகும் என்றும் தற்போதைய உடனடித் தேவை தடுப்பூசி இல்லை என்றும் கொரோனா வைரஸை நோயை குணப்படுத்தும் மருந்து தான் தேவை என்றும் உலக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்