ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது கர்ப்பிணி மனைவி, மாமனார் மற்றும் மாமியாரை வெட்டி கொலை செய்த நிலையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், புவனேஸ்வரிக்கும் விஜய் என்பவருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, புவனேஸ்வரி தனது கணவரை பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதை அறிந்த பாலு, தனது மனைவியின் கள்ளக்காதல் குறித்து ஆத்திரம் அடைந்தார். ஒரு கட்டத்தில் நேராக மாமியார் வீட்டிற்கு சென்று, அங்கு தனது கர்ப்பிணி மனைவி புவனேஸ்வரி, மாமனார் அண்ணாமலை மற்றும் மாமியார் ராஜேஸ்வரி ஆகிய மூவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாலுவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் போது, "தன்னுடைய மனைவியின் கள்ளத்தொடர்பு காரணமாக தான் வெறி பிடித்து மூவரையும் வெட்டி கொலை செய்தேன்," என்று அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.