விமான ஓடுபாதையா?? சுற்றுலாத் தலமா?? புரியலயே

திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (11:08 IST)
உலகின் அபாயகரமான விமான ஓடுபாதைகளில் ஒன்றாக மாஹோ கடற்கரை தற்போது பரபரப்பான சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது.


 


கடற்கரையின் மிக அருகாமையில் அமைந்திருக்கும் இந்த ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக வரும் விமானங்கள் மிக தாழ்வாக இந்த இடத்தில் பறப்பதை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற கரீபியன் தீவு கூட்டங்களில் அமைந்திருக்கும் மாஹோ பீச்தான் இப்போது பரபரப்பான சுற்றுலா தலமாக மாறியிருக்கிறது. ஒருபுறம் பீச்சில் காற்றுவாங்கியபடியும், சூரிய குளியல் போட்டபடியும், தலையில் இடித்துச் செல்வது போன்று தரையிறங்கும் விமானங்களை கண்டு மகிழ்வதற்காக இங்கு சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.

பொழுதுபோக்குவதற்காக வருபவர்கள் மட்டுமின்றி விமான ஆர்வலர்கள் மற்றும் சாகச விரும்பிகளுக்கான சிறந்த தலமாகவும் இது மாறியிருக்கிறது.

விமானங்கள் பலத்த சப்தத்துடன் தலையில் இடித்துச் செல்வது போல தரையிறங்குவது புதிய அனுபவத்தையும், த்ரில்லையும் தருவதாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றன.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்