AI வளர்ச்சி அடைந்தால் மக்கள் ஒருவருக்கொருவர் கொலை செய்து கொள்ளலாம்: எரிக் ஷமிட் எச்சரிக்கை

வியாழன், 25 மே 2023 (16:48 IST)
AI என்ற செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி அடைந்தால் மக்கள் ஒருவருக்கொருவர் கொலை செய்து கொள்ளலாம் என முன்னாள் கூகுள் சிஇஓ எரிக் ஷமிட் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் லண்டனில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் கூகுள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஷமிட்செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பேசுவது போல் எதிர்காலத்தில் இனிமையாக இருக்காது என்றும், எதிர்காலத்தில் மிகவும் கவலை தரக்கூடிய வகையில் இருக்கும் என்றும் தீயவர்கள் இதை தவறாக பயன்படுத்தாமல் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.
 
இந்த தொழில்நுட்பம் அதிக அளவில் வளர்ச்சி அடைந்தால் மக்கள் பேராபத்திற்கு ஆளாகவோ அல்லது ஒருவரை ஒருவர் கொலை செய்து கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே பல தொழில்நுட்ப வல்லுநர்கள் AI தொழில்நுட்பம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்