அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மார்க் ஜூக்கர்பெர்க் எடுத்த அதிரடி நடவடிக்கை!

வெள்ளி, 8 ஜனவரி 2021 (07:17 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் சமீபத்தில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அவர் நீதிமன்றத்தில் வழக்குகளை சரமாரியாக பதிவு செய்து வருகிறார் 
 
இந்த நிலையில் வேறு வழியில்லாமல் நேற்று தனது தோல்வியை ஒப்புக் கொண்டதையடுத்து ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடன் புதிய அதிபராக பதவி ஏற்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
இருப்பினும் டிரம்பின் ஆதரவாளர்கள் நேற்று அமெரிக்க நாடாளுமன்றம் மீது நடத்திய தாக்குதல் அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு கறைபடிந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த தாக்குதல் குறித்து அவரது சொந்த கட்சியினரே கட்சியினர்களே அதிர்ச்சி அடைந்து உள்ளனர் என்பதும் அவர் பதவியிலிருந்து விலக முன்னரே அவரை பதவி நீக்கம் செய்ய சொந்த கட்சியினரே வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் தவறான மற்றும் வன்முறையை தூண்டும் படியான பதிவுகளையும் டிரம்ப் செய்ததால் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டதாக நேற்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது டுவிட்டரை அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இன் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது என்றும், டிரம்ப் அதிபராக தொடரும் வரை இந்த தடை நீடிக்கும் என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
அமெரிக்க அதிபர் வரலாற்றில் ஒரு அதிபரின் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்