ஆப்கன் விமானத்தில் தொங்கி பயணம் செய்து பலியானவர் கால்பந்து வீரரா? அதிர்ச்சி தகவல்!

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (07:30 IST)
ஆப்கன் விமானத்தில் தொங்கி பயணம் செய்து பலியானவர் கால்பந்து வீரரா?
ஆப்கன் நாட்டை தற்போது தாலிபான்கள் ஆக்கிரமித்து தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் அந்நாட்டில் இருந்து ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கன் நாட்ட்ல் இருந்து கிளம்பிய விமானம் ஒன்றில் படிக்கட்டுகளிலும் சக்கரங்களிலும் தொங்கியபடி பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் விமானத்தில் பயணம் செய்த 3 பேர் கீழே விழுந்து பலியான அதிர்ச்சி சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலான என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தின் பக்கவாட்டில் தொங்கியபடி சிலர் பயணம் செய்ததில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிர் இழந்தனர். அவர்களில் ஒருவர் ஆப்கன் நாட்டின் கால்பந்து அணி வீரர் என தெரியவந்தபோது 
 
கால்பந்து வீரரின் உடல் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது. ஆப்கனில் இருந்து தப்பிச் செல்ல விமானத்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்தவர் ஒரு இளம் கால்பந்து வீரர் என்ற தகவல் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்