சர்வதேச நாணய நிதியத்தில் ஆப்கன் அரசு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பு வரை 440 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பீட்டில் சுமார் 28,000 கோடி ரூபாய் இருப்பு வைத்திருந்தது. ஆப்கன் தற்போது தாலிபான்கள் வசமாகியிருக்கும் நிலையில் இந்த நிதியை தாலிபான்கள் கைப்பற்றக்கூடும் என்பதால் ஐ.எம்.எப். இந்த நிதியை முடக்கியுள்ளது.