ரம்ஜான் நோன்பு துறந்த சில நிமிடங்களில் குண்டுவெடிப்பு – ஆப்கானிஸ்தானில் சோகம்!

சனி, 1 மே 2021 (12:27 IST)
ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றின் அருகே சிலர் நோன்பு துறந்தபோது நடைபெற்ற வெடிக்குண்டு தாக்குதலில் 30 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தில் தலைநகர் புல் இ ஆலமில் மருத்துவமனை ஒன்று உள்ளது. தற்போது ரம்ஜான் மாதம் என்பதால் அங்கு குழுமிய இஸ்லாமியர்கள் சிலர் நோன்பு துறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு சில நிமிடம் கழித்து கார் குண்டு வெடித்ததில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 70க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் அருகில் உள்ள கார்கள், மருத்துவமனை வாகனங்களும் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்