அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய இளம்பெண்: கடைசியில் நடந்த விபரீதம்

புதன், 6 பிப்ரவரி 2019 (13:37 IST)
பெண் ஒருவர் தனது நண்பருக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியதால் தான் பட்ட அவஸ்தைகளை கூறியுள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த மேகன் ஹிண்டன்(19) என்ற இளம்பெண் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் தன் வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய பிரச்சனை குறித்து வெளியே சொல்லியுள்ளார். தான் செய்த தவறை யாரும் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
எனக்கு 14 வயதாக இருக்கும்போது பள்ளிப்படிப்பை மேற்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஆன்லைன் நண்பர்கள் அதிகம். அதில் நண்பர் ஒருவர் எனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்ப சொன்னார். ஆனால் மறுத்துவிட்டேன். அந்த நபர் தொடர்ந்து நச்சரித்தார். இதனால் நான் புகைப்படத்தை அனுப்பிவிட்டேன்.
 
பிறகு தான் தெரிந்தது என்னிடம் புகைப்படத்தை கேட்டது ஒரு ஆண் அல்ல ஒரு பெண் என்று. அந்த பெண் என் பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் நான் புகைப்படத்தை அனுப்பிவிட்டார். இதனால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். அனைவரும் என்னை கிண்டல் செய்தார்கள். நரக வேதனையை அனுபவித்தேன். 
 
என் வாழ்க்கையில் அது ஆறாத வடு. தயவு செய்து என்னைப்போல் யாரும் இப்படி செய்து பிரச்சனையில் சிக்கிக்கொள்ளாதீர்கள் என அந்த பெண் அட்வைஸ் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்