சம்பவ தினத்தன்றும் இருவருக்கு எதோ பிரச்சனை நடந்துள்ளது. இதனை லியாங் வீட்டிற்கு வந்த உடனே அவரது மனைவி பத்த வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லியாங், தனது தாயை அடித்து உதைத்து புல்லை சாப்பிடுமாறு துன்புறுத்தியுள்ளார். இதற்கு இவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.
எதிர் வீட்டில் இருந்த நபர் இந்த காட்சிகள் அனைத்தையும் வீடியோவாக எடுத்து இணையத்தில் பரவவிட்டார். இந்த காட்சிகள் வைரலாகி பலரது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. போலீஸாரும் அந்த நபரை கூப்பிட்டு எச்சரித்தனர். கஷ்டப்பட்டு வளர்க்கும் பெற்றோரை இப்படி செய்யும் பிள்ளைகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.