ஐபோனை துப்பாக்கி என நினைத்து அப்பாவியை சுட்டுக் கொன்ற போலீஸார்

சனி, 24 மார்ச் 2018 (14:29 IST)
அமெரிக்காவில் ஸ்டீபன் கிளார்க் என்ற அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் கருப்பு இனத்தவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், சாக்ரமென்டோவில் வசித்து வந்தவர் ஸ்டீபன் கிளார்க். ஸ்டீபன் கிளார்க் கருப்பு இனத்தவர் ஆவார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஸ்டீபன் கிளார்க்கின் நடவடிக்கையின் மீது சந்தேகித்த போலீஸார், அவரை பிடிக்க முற்பட்டனர். இதனால் பயந்து போன ஸ்டீபன் தனது வீட்டின் பின் பக்கம் ஓடிச் சென்று பதுங்கினார். 
 
இந்நிலையில் ஸ்டீபனின் கையிலிருந்த ஐபோனை துப்பாக்கி என நினைத்த போலீஸார் ஸ்டீபனை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஸ்டீபன் சம்பவ இடத்திலே பரிதாபமாக் உயிரிழந்தார். இச்சம்பவம் கருப்பு இனத்தவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அவர்கள் தற்பொழுது சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்