ஒவ்வொரு 4 வினாடிக்கும் ஒரு மனிதர் தற்கொலை... அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை தகவல்!

செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (17:41 IST)
உலகம் அதிவேகமாய் இயங்கிவரும் நிலையில், மனிதனும் எந்திரம் போல மாறிவருகிறான், இதனால்,அவனுக்கு மன அழுத்தமும் ஏற்படுகிறது அதன் காரணத்தால் ,  விபரீதமான தற்கொலை முடிவும் எடுத்துவிடுகிறான். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், உலக சுகாதார அமைப்பு ஒரு ஆய்வு அறிக்கையை வெளிட்டுள்ளது. அதில் வருடம்தோறும், 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும் அதில் தெரிவித்துள்ளது.
 
குறிப்பாக,  இந்த தற்கொலை சம்பவம், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் தான் அதிகமாக நடைபெறுகிறது என்றும், கடந்த 2010  ஆம் ஆண்டுமுதல் 2016 ஆம் ஆண்டு இந்த தற்கொலை எண்ணிக்கை ஒரே சம அளவில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
 
இந்த தற்கொலை எண்ணத்தை தடுக்க, சில  நாடுகளில், கவுன்சிலிங்   அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்