சாலை விபத்தில் ஒரு வினாடிக்கு எவ்வளவு பேர் உயிரிழக்கிறார்கள் தெரியுமா...?

சனி, 8 டிசம்பர் 2018 (16:53 IST)
நம் இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக அளவில் சாலை விபத்துகள் நடப்பதாக ஒர் ஆய்வுமுடிவு சொல்கிறது. தற்போது உலக அளவில் ஒவ்வொரு செகண்டுக்கும் ஒரு மனிதர் சாலை விபத்தில் மரணமடைவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. மேலும் இந்த விபத்துகளை உடனடியாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சாலை விபத்துகளில் இளைஞர்களே அதிக அளவு விபத்தில் சிக்கி உயிரிழப்பதாகவும்  அவர்களில்  5 முதல் 29 வயதிற்குட்பட்டவர்களே அதிகம் எனவும் பகிரங்கமாக இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
உலக வல்லரசு நாடுகள் மற்றும் முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் சாலை பாதுகாப்பு வழிமுறைகள் சிறப்பாக இருக்கின்றன. அதைபோன்றே மற்ற நாடுகளிலும் சாலை பாதுகாப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும் என  உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
 
மேலும் சாலை விபத்துகளில் ஒவ்வொரு ஆண்டும் 1.35 மில்லியன் மக்கள் விபத்தில் மரணமடைவதாகவும், இனி வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்தியாவைப் போன்ற நாடுகளுக்கு இந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்