ஐநா சபையில் நடைபெற்ற பருவநிலை சார்ந்த உச்சி மாநாட்டில், பல்வேறு நாட்டு உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், ஸ்வீடன் நாட்டு சுற்றுச் சூழல் ஆர்வலரான 16 வயது கிரெட்டா தன்பெர்க் பங்கேற்றார்.
மேலும், கனவுகளை திருடிவிட்டீர்கள், மக்கள் துனபத்தில் பாதிக்கபட்டுள்ளனர். உலக மக்கள் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம் என மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசி, இறுதியில் அழுது, சரமாரியாக உலகத்தலைவர்களை குற்றம் சாட்டினார்.
இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின், அமெரிக்க அதிபர் மத சுதந்திரம் தொடர்பான அடுத்த நிகழ்ச்சியில் ( meeting on religious Freedom)கலந்து கொள்ளச் சென்றார். அப்போதும் அதிபர் டிரம்ப் கிளம்பிச் செல்லும் போது, அவரை பார்த்த தன்பெர்க், முறைத்து பார்த்தபடி நின்றிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.