ஆர்டரை மாற்றி கொடுத்த மேனேஜர்; தூக்கி முகத்தில் அடித்த கஸ்டமர் – வைரல் வீடியோ

வெள்ளி, 25 அக்டோபர் 2019 (18:32 IST)
அமெரிக்காவில் மெக் டோனல்ட்ஸ் கடை ஒன்றில் ஆர்டரை மாற்றி கொடுத்த மேனேஜர் முகத்தில் பர்கரை தூக்கி கஸ்டமர் ஒருவர் அடித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

உலகளவில் புகழ்பெற்ற மெக்டோனல்ட்ஸ் நிறுவனத்தின் கிளை அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பெண் ஒருவர் அங்கு தனக்கு சில உணவுகளை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட பார்சலில் அவர் கேட்ட உணவு இல்லாததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நேரடியாக உணவகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் அவரை அந்த கடையின் மேனேஜர் நீண்ட நேரம் காக்க வைத்துள்ளார். இந்த உணவு தனக்கு வேண்டாமென்றும் தனது பணத்தை திரும்ப தரும்படியும் அந்த பெண் கேட்டதற்கு மேனேஜர் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் பார்சலில் இருந்த பர்கரை தூக்கி மேனேஜர் முகத்திலேயே அடித்துள்ளார். பதிலுக்கு மேனேஜரும் கையில் வைத்திருந்த ப்ளெண்டரை அந்த பெண் முகத்தில் வீச அந்த பெண் தரையில் சரிந்து விழுந்தார். இருவருக்கிடையே நடைபெற்ற சண்டை அங்கு இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த பெண் செய்ததும் தவறுதான் என சிலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

VIDEO: A wrong order leads to a customer-manager food fight at McDonald's in Colerain Township.

The manager apparently throws a blender at the customer, and it ricochets off her face, knocking her to the ground: https://t.co/JKYnmBKsQO pic.twitter.com/WxCGcs0M0O

— WLWT (@WLWT) October 23, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்